மத்தியில் மோடியின் தலைமையிலான ஆட்சியில் அத்தியாவசிய பொருள்களின் விலை குறைந்துவருகிறது. இந்தமாதம் மேலும் விலை குறையும்' என பாஜக தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

புணேயை அடுத்த லோனா வாலா நகரில் நடந்த தேர்தல்பிரசார கூட்டத்தில் பங்கேற்ற அமித்ஷா மேலும் கூறியதாவது:

பிரதமராக நரேந்திரமோடி பொறுப்பேற்ற பிறகு பெட்ரோல், டீசல்விலையும், அத்தியாவசிய பொருள்களின் விலையும் குறைந்து வருகின்றன. மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாஜக.,வுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். முன்னேற்ற பாதையில் மாநிலத்தை கொண்டுசெல்ல நரேந்திர மோடிக்கு தோளோடு தோள்கொடுக்கும் அரசை மகாராஷ்டிரத்தில் ஏற்படுத்தவேண்டும். காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசின் ஊழல்_ஆட்சியால் மாநிலம் பின் தங்கியுள்ளது என்றார்.

Leave a Reply