மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்ற பிரச்சாரகூட்டத்தில் கலந்துகொண்ட நிதின் கட்காரி மீது ஷு வீச முயன்ற நபரை பாஜக.வினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

புனே அருகே உள்ள கோத்ரட் என்ற பகுதியில் நடை பெறும் தேர்தல்பிரச்சார கூட்டத்தில் கலந்துகொள்ள நிதின் கட்காரி வந்த போது அவர் மீது ஷு-வை வீச அந்த நபர் முயன்றுள்ளார். அதற்குள் பாஜக.வினர் அந்த நபரை மடக்கிபிடித்தனர். பின்னர் அவர் போலீசாரிடம் ஒப்படைக்கப் பட்டார். அதன்பின் அங்கு நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற கட்காரி தங்கள்கட்சி வேட்பாளர் மேதா குல் கர்னியை ஆதரித்து பேசினார். அந்த நபர் எதற்காக கட்காரிமீது ஷு வீசினார் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply