பால் கொள்முதல் விலையை உயர்த்தவேண்டும்' என்று பா.ஜ.க, தமிழக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியுள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்துக்கு, நாள்தோறும் 1.5 கோடி லிட்டர் பால் தேவை. இதில், 23.5 லட்சம் லிட்டர் பால், ஆவின் மூலம் சப்ளை செய்யப் படுகிறது. மீதமுள்ள பாலை, தனியார் மூலம் சப்ளை செய்கின்றனர். ஆவின் நிறுவனம், கொள்முதல் செய்யும் பசும்பாலுக்கு, லிட்டருக்கு 19 முதல் 23 ரூபாயும், எருமைப் பாலுக்கு லிட்டருக்கு, 28 முதல் 30 ரூபாயும் அளிக்கிறது.

ஆனால், தனியார் கொள் முதல் செய்யும் பசும் பாலுக்கு, லிட்டருக்கு 25 முதல் 30 ரூபாயும், எருமைப்பாலுக்கு லிட்டருக்கு 40 ரூபாயும் அளிக்கின்றனர். இதனால், பால் உற்பத்தியாளர்கள், தனியாரிடம் பாலைவிற்கவே அதிகம் விரும்புகின்றனர்;

அவர்களை நாடி செல்கின்றனர். பால் விற்பனையில் தனியாரின் பங்கு அதிகமாக இருப்பதால், இந்தாண்டில் மட்டும், நான்குமுறை பால்கொள்முதல் விலையை உயர்த்தியுள்ளனர். ஆனால், ஆவின்நிறுவனம் அப்படி செய்ய வில்லை. ஆவின் நிறுவனத்தின் போக்கு, தனியாரை ஊக்குவிக்கும் விதத்தில் உள்ளது.

இதனால், அதிகவிலை கொடுத்து, தனியாரிடம் பால்வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு, பொது மக்கள் தள்ளப்பட்டு வருகின்றனர். எனவே, ஆவின்நிறுவனம், பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். இதன் மூலமே, பொது மக்களை பாதுகாப்பதோடு, பால் உற்பத்தியாளர்களையும் தக்கவைக்க முடியம். அவர்கள், இன்று அறிவித்துள்ள பால் உற்பத்தி நிறுத்த போராட்டத்தையும் தடுக்கமுடியும். என்று , தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். 

Leave a Reply