கடந்த சிலநாட்களாக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவந்த மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள அருண்ஜெட்லிக்கு உடல் பருமனாவதை தடுக்கும் அறுவை சிகிச்சை அண்மையில் செய்யப்பட்டது. அப்போது வீடுதிரும்பிய அவருக்கு மீண்டும் வயிற்றில் தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து , டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைக்கு பிறகு நோய்த்தொற்று குணமாகி விட்டதால், அருண்ஜெட்லி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்தமருத்துவர் அமித்குப்தா தெரிவித்துள்ளார்.

எனினும், அடுத்த சிலநாட்களுக்கு அமைச்சர் ஓய்வு எடுக்கவேண்டியுள்ள நிலையில், வாஷிங்டனில் வரும் 10ம் தேதி தொடங்கும் உலகவங்கியின் நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்கமாட்டார் என்று தெரிகிறது. நிதித்துறை மட்டுமின்றி ராணுவத்துறை அமைச்சர் பொறுப்பையும் அருண் ஜெட்லி கூடுதலாக வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply