இணைய வணிகம் தொடர்பாக வரும்புகார்களால், இணையவழி விற்பனையில் மேலும் தெளிவான வரையறைகள் குறித்து அரசு பரிசீலிக்கும் என மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதா ராமன் தெரிவித்துள்ளார்.

ப்ளிப் கார்ட் இணைய தளத்தின் ஒருநாள் அதிரடி தள்ளுபடி விற்பனை குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அது பற்றி புகார்கள் வந்துள்ளதாக கூறிய அவர், அது தொடர்பாக விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இணையவழி வணிகம் தொடர்பாக சிறு மற்றும் மொத்தவணிகர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப் படுவதாக கூறிய அமைச்சர், அது பற்றி அரசு ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்தார். இந்தவிஷயத்தில் கூடுதல் தெளிவு அவசியம் என்பதால், அரசு விரைவில் அறிவிப்புவெளியிடும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

Leave a Reply