ஊழல் மலிந்துள்ள ஹரியாணாவை திறன்மிகுந்த மாநிலமாக மாற்றுவோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

ஹரியாணா சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு மகேந்திரகர், ரோத்தக், சோனிபட் உள்ளிட்ட பகுதிகளில் பிரதமர் மோடி புதன் கிழமை பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

ஹரியாணாவில் ஊழல் தலை விரித்தாடுகிறது என்பதை விட, மாநிலமே ஊழலில் மலிந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். பூபிந்தர்சிங் ஹூடா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியிலும், இதற்குமுன்பு இருந்த ஓம்பிரகாஷ் சௌதாலா தலைமையிலான குடும்ப ஆட்சியிலும் ஹரி யாணா சீரழிந்துவிட்டது.

ஊழல் நிறைந்த இந்தமாநிலத்தை மீட்க வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்களா? அதற்கு பாஜகவை நீங்கள் பெரும்பான்மை பலத்துடன் தேர்ந்தெடுக்க வேண்டும். ஊழல்மலிந்த ஹரியாணாவை திறன்மிகுந்த மாநிலமாக நாங்கள் மாற்றுவோம். இந்த தேர்தல்தான் ஹரியாணா மக்களின் தலை விதியை நிர்ணயிக்கிப் போகிறது.

ஹூடா ஆட்சியில் மாநிலத்தில் தலித்மக்கள், பெண்களின் நிலை மோசமான நிலையில் உள்ளது. தலித்பெண்கள் கடுமையான வன்முறைக்கு ஆளாகி வருகின்றனர். ஆனால், அதற்கு காரணமானவர்கள் மீது எந்த நடவடிக்கையையும் ஹூடா அரசு எடுக்க வில்லை. இது வெட்கக் கேடானது.

மத்திய அரசும், மாநில அரசும் இணக்கமாக இருப்பது மிகவும் அவசியம். அது தான் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்து செல்லும்.

வீரத்துக்குப் பெயர்போன ராணுவ வீரர்களும், உழைப்பில் சிறந்த விவசாயிகளும் நிறைந்தபூமி அல்லவா ஹரியாணா? இந்த மாநிலம் சீரழிந்து வருவதை என்னால் அனுமதிக்க முடியாது.

முந்தைய ஆட்சியாளர்கள் ஜாதியாலும், மதத்தாலும் மாநிலத்தை பிரித்துள்ளனர். வேலை வாய்ப்பு இல்லாததால் ஹரியாணா விலிருந்து ஏராளமானோர் வேறுமாநிலங்களில் தஞ்சமடைந்து வருகின்றனர். பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்த அவல நிலை மாறும்.

மாநிலத்தின் மனித ஆற்றல், ஆக்கசக்திக்குப் பயன்படுத்தப்படும். குடிநீர்ப் பற்றாக்குறை அறவே போக்கப்படும் என்றார்.

Leave a Reply