தன் மீது தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்குகளை ரத்து செய்யவேண்டும் என்று கோரி பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

தமிழக மீனவர் பிரச்னை மற்றும் முல்லை பெரியாறு பிரச்னைகளில் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியதுகுறித்து விமர்சனம் செய்தது , டிவிட்டர் வலைதளத்தில் ஜெயலலிதா பற்றி அவதூறாக செய்தி வெளியிட்டது என்று குற்றம் சுமத்தி சுப்பிரமணியன் சுவாமிமீது மொத்தம் 5 அவதூறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன

செப்டம்பர் 24ம் தேதி இந்தவழக்கை விசாரித்த நீதிபதி ஆதிநாதன் அக்டோபர் 30ம் தேதி ஆஜராகுமாறு சுப்பிரமணியன் சுவாமிக்கு சம்மன் அனுப்ப உத்தர விட்டார் இந்த நிலையில் தன்மேல் தொடுக்கப்பட்டுள்ள இந்த வழக்குகளை ரத்துசெய்ய வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

Leave a Reply