ஜெயலலிதாவின் ஜாமின்தொடர்பாக மட்டும் சிந்திக்காமல், மக்கள் நலனிலும் தமிழக அமைச்சர்கள் கவனம் செலுத்தவேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் வலியுறுத்தியுள்ளார்.

தொடர் போராட்டங்களால் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், அதனை சரி செய்யும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபடவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தமிழகத்தில் பூரண மது விலக்கை வலியுறுத்தி சென்னையில் வள்ளுவர்கோட்டம் அருகே நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டு பேசியபோது தமிழிசை இவ்வாறு தெரிவித்தார்.

Leave a Reply