புது டெல்லியில் 'ஆதர்ஷ் கிராம யோஜனா' என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை தொடங்கிவைத்து மோடி பேசியதாவது: ஏழை மக்களின் நலனை காப்பதே இந்திய அரசின் கனவு. கிராமத்தில் உள்ள ஏழைகள், விவசாயிகள், ஆகியோருக்காக கொண்டு வரப்பட்ட திட்டம் இது. கிராமங்களை வளர்ச்சியடைய வைப்பதே இத்திட்டத்தின் நோக்கம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

விழாவில் பிரதமர் மோடி மேலும் பேசியதாவது: நாடு சுதந்திரம் அடைந்த பின் அமைக்கப்பட்ட ஒவ்வொரு அரசும், கிராமப்புற மேம்பாட்டிற்கான திட்டங்களை செயல் படுத்தியது. இந்ததிட்டங்கள் தொடர்ந்து செயல் படுத்தப்படும். அதேவேளையில், காலத்திற்கேற்ற வகையில் இந்ததிட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும். மேலும், மாற்றத்தின் வேகமும் அதிகரிக்கப்படவேண்டும்.

கிராமப்புற மேம்பாட்டில் காலத்திற்கேற்ற மாற்றங்களை நாம் கொண்டு வருவோம். இதில் புதிய விஷயங்களும் சேர்க்கப்படும். நாட்டில் பலகிராமங்கள் நம்மை பெருமைப்படுத்தும் வகையில் உள்ளன. ஆனால் அதேசமயம், அரசின் திட்டங்கள் சென்றடையாத கிராமங்களும் இருக்கவே செய்கின்றன. அனைத்து கிராமங்களுக்கும் சேர்த்துதான் திட்டங்கள் தீட்டப்படுகின்றன.

ஆனால் சில கிராமங்களுக்கு மட்டுமே இவை சென்றுசேர்கின்றன. ஏனென்றால் சிலபேர் வேறு மாதிரியாக சிந்திக்கின்றனர். இந்ததிட்டம் ஏழைகள், விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்களுக்கான திட்டம். மகாத்மாகாந்தி எப்போதும் கிராமங்களை பற்றியே பேசிக் கொண்டிருப்பார். கடந்த 1915ம் ஆண்டு அவர் தென் ஆப்ரிக்காவிலிருந்து இந்தியா திரும்பியபின், கிராமப்புற மக்களின் உரிமைகளுக்காக தனது போராட்டத்தை துவங்கினார்.ஒரு எம்.பி., அவர் எந்தகட்சியைச் சேர்ந்தவராகியினும், அவர்கள் மக்களின் மேம்பாட்டிற்காக பாடுபட வேண்டும். நம்மிடம் 800 எம்.பி.,க்கள் உள்ளனர். அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் 3 கிராமங்களை மேம்படுத்தினால், 2019ம் ஆண்டிற்குள் 2500 கிராமங்கள் மேம்பாடு அடைந்துவிடும். இந்த திட்டத்தை பயன்படுத்தி, எம்.எல்.ஏ.,க்களும் கிராமப் புறங்களில் மேம்படுத்த முயற்சிக்கலாம். என்று மோடி பேசினார்.

Leave a Reply