சயான் கோலி வாடா தொகுதி பா.ஜ.க வேட்பாளர் தமிழ்ச் செல்வனை ஆதரித்து தமிழ்நாடு பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

மும்பை சயான் கோலிவாடா சட்ட சபை தொகுதியில் பா.ஜ'க சார்பில் தமிழரான தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார். அவர் தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க தேசிய பொதுச்செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் சயான் கோலி வாடாவில் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.

இந்நிலையில் பா.ஜ.க வேட்பாளர் தமிழ்ச் செல்வனை ஆதரித்து நேற்று காலை சயான் கோலிவாடாவில் பிரமாண்ட தேர்தல்பிரசார பேரணி நடந்தது. இந்தபேரணி காலை 9 மணிக்கு சயான் கோலிவாடா விருந்தாவன் சொசைட்டி பகுதியில் இருந்து தொடங்கியது. பேரணியை பா.ஜ.க தேசிய பொதுச் செயலாளர் எச்.ராஜா, தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.

பேரணியில் பா.ஜனதா கட்சி தொண்டர்கள் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

சயான் கோலிவாடா முழுவதும் முக்கியவீதிகள் வழியாக சென்று வேட்பாளர் தமிழ்ச் செல்வன் அலுவலகத்தை சென்றடைந்தது. பேரணியில் தமிழ்நாடு பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார். அப்போது அவர் பேசியதாவது :-

மராட்டிய சட்ட சபை தேர்தலில் பா.ஜ.,கட்சி சார்பில் சயான் கோலிவாடா தொகுதியில் போட்டியிட எங்களது கட்சி ஒருதமிழரை வேட்பாளராக நிறுத்தி உள்ளது. இது மும்பை தமிழர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியாகும்.

வேட்பாளர் தமிழ்ச் செல்வன் ஏற்கனவே மும்பை மாநகராட்சி உறுப்பினராக இருந்து இப்பகுதிமக்களுக்கு எண்ணற்ற பணிகள்செய்துள்ளார். அவர் எம்.எல்.ஏ. ஆனால் நிச்சயமாக சயான் கோலி வாடா தொகுதி மக்களுக்கு நிறைய சேவைகள் செய்துதர முடியும். காலநேரம் பார்க்காமல் உழைக்க கூடியவர் தமிழ்ச் செல்வன். எனவே நீங்கள் அவரை அதிகவாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவேண்டும் என்று அவர் பேசினார்.

Leave a Reply