இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஏற்பட்ட பிரச்சனையில் தலையிட வேண்டும் என்ற பாகிஸ்தானின் கோரிக்கையை ஐநா நிராகரித்து விட்டது.
.

இதனைதொடர்ந்து எல்லைப் பிரச்சனையை சர்வதேச பிரச்சனையாக மாற்றமுயன்ற பாகிஸ்தானின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

ஜம்முகாஷ்மீரில் எல்லை கட்டுப்பாடு கோடுபகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அடிக்கடி சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்து கிறார்கள். கடந்த 1ம் தேதி முதல் நடைபெற்ற தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் சரியானபதிலடி கொடுக்கப்பட்டது.

இதை தாக்கு பிடிக்க முடியாமல் எல்லையில் பதற்றத்தை தணிக்க ஐநா தலையிடவேண்டும் என்று பாகிஸ்தான் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. இதுதொடர்பாக அந்நாட்டின் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ், ஐநா பொதுச்செயலாளர் பான்கி மூனுக்கு எழுதிய கடிதத்தில் அக்டோபர் 1-ம் முதல் 10-ம் தேதி வரை எல்லைக் கட்டுப்பாடு கோடுபகுதியில் 20 முறை அத்துமீறல் நடந்தது என்றும் பாகிஸ்தான் தரப்பில் 12 அப்பாவிகள் உயிரிழந்தனர் என்றும் 9 ராணுவ வீரர்கள் உள்பட 52 பேர் படுகாயம் அடைந்தனர் என்றும் கூறியிருந்தார்.

எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிப்பதிலும், காஷ்மீர் பிரச்சனைக்கு அமைதி தீர்வுகாண்பதிலும் ஜநாவின் தலையீடு அவசியமானது என்றும் கடிதத்தில் மேலும் வலியுறுத்தி யிருந்தார்.

இதற்கு இந்தியாதரப்பில், காஷ்மீர் இருதரப்பு பிரச்சனை என்பதால் 3-வது நாடோ அல்லது ஐ.நா சபையோ தலையிட அனுமதிக்கமாட்டோம் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் பாகிஸ்தானின் கோரிக்கைக்கு பதிலளித்து ஐநா பொதுச் செயலாளர் பான்கி மூனின் துணைச் செய்திதொடர்பாளர் பர்கான் ஹக், நியூயார்க்கில் நேற்று கூறுகையில், பாகிஸ்தானின் கடிதத்தை பரிசீலித்தபிறகு இந்த பிரச்சினையில் ஐநா தலையிடுவது இல்லை என்று பொதுச்செயலாளர் முடிவெடுத்து உள்ளார் என்றார்.

இந்தியாவும், பாகிஸ்தானும் தங்களது வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், காஷ்மீரில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த நீண்ட காலத் தீர்வு ஏற்பட வேண்டும் என்றும், ஐநா பொதுச்செயலாளர் கருதுகிறார் என்றார்.

இதன் மூலம் காஷ்மீர் பிரச்சனையை சர்வதேச பிரச்சனையாக்கும் முயற்சி மீண்டும் தோல்வியடைந்து இருக்கிறது.

Tags:

Leave a Reply