மத்திய போக்கு வரத்து மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்காரி நாக்பூரில் நிருபர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ''மராட்டிய சட்ட சபை தேர்தலில் பா.ஜ.க தனி பெரும்பான்மை பெறும். விதர்பா மண்டலத்தில் 40–45 தொகுதிகள் உள்பட மொத்தம் 150 முதல் 160 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றிபெறும்'' என்றார்.

முதல்மந்திரி பந்தயத்தில் நீங்கள் இருக்கிறீர்களா? என்ற நிருபரின் கேள்விக்கு பதிலளித்த அவர், ''எனக்கு மாநில அரசியலில் ஆர்வம் இல்லாததால், நான் முதல்மந்திரி பந்தயத்தில் இடம்பெறவில்லை. உயர் பதவியை பெறும்வகையில் தகுதிவாய்ந்த தலைவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்'' என்றார்.

Leave a Reply