ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தத்தை திரும்பப் பெறுமாறு தமிழக பா.ஜ.க வலியுறுத்தியுள்ளது.

சென்னை திருவல்லிக் கேணி கஸ்தூரிபாய் மகப்பேறு மருத்துவமனையில் தூய்மை இந்தியா இயக்கத்தை தொடங்கிவைத்த பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் இதனை தெரிவித்துள்ளார். வரும் 21ஆம் தேதி வேலை நிறுத்தம் செய்யப் போவதாக ஆம்புலன்ஸ் வேன் ஓட்டுநர்கள் அறிவித்துள்ளதால், அன்றைய தினம் பட்டாசுவிபத்தால் யாரேனும் பாதிக்கப்பட்டால் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டுசெல்வதில் சிக்கல் உருவாகும் என அவர் கூறினார்.

Leave a Reply