மகாராஷ்டிரம், ஹரியாணா சட்டப் பேரவைத் தேர்தல்களில், தனி பெரும் கட்சியாக பாஜக உருவெடுக்கும் என்று கருத்து கணிப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டைம்ஸ் நவ், ஜீ நியூஸ் தொலைக் காட்சிகளுக்காக "சி வோட்டர்' நடத்திய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

மகாராஷ்டிரத்தில் மொத்தம் உள்ள 288 இடங்களில், பாஜகவுக்கு 129 இடங்கள் கிடைக்கும். சிவசேனைக்கு 56, காங்கிரஸýக்கு 43, தேசியவாத காங்கிரஸýக்கு 36, மகாராஷ்டிர நவநிர்மாண் சேனைக்கு (எம்என்எஸ்) 12, பிற கட்சிகள், சுயேச்சைகளுக்கு 12 இடங்கள் கிடைக்கும்.

ஹரியாணாவில் மொத்தமுள்ள 90 இடங்களில், பாஜகவுக்கு 37 இடங்கள் கிடைக்கும். இந்திய தேசிய லோக் தளத்துக்கு 28, காங்கிரஸýக்கு 15, ஹரியாணா ஜன்ஹித் காங்கிரஸýக்கு 6, பிற கட்சிகள், சுயேச்சைகளுக்கு 4 இடங்கள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.சி. நீல்சன்: ஏ.பி.பி. தொலைக்காட்சிக்காக ஏ.சி. நீல்சன் நடத்திய வாக்குக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

மகாராஷ்டிரத்தில் பாஜகவுக்கு 127 இடங்கள் கிடைக்கும். சிவ சேனைக்கு 77, காங்கிரஸýக்கு 40, தேசியவாத காங்கிரஸýக்கு 34, எம்.என்.எஸ் கட்சிக்கு 5 இடங்களும் கிடைக்கும். ஹரியாணாவில் பா.ஜ.க.,வுக்கு 46, காங்கிரஸýக்கு 10, இந்திய தேசிய லோக்தளத்துக்கு 29, ஹரியாணா ஜன்ஹித் காங்கிரஸýக்கு 6, பிற கட்சிகள், சுயேச்சைகளுக்கு 4 இடங்கள் கிடைக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா டி.வி.: இந்தியா டி.வி. நடத்திய வாக்குக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

மகாராஷ்டிரத்தில் பாஜகவுக்கு 124 முதல் 134 வரையிலான இடங்கள்கிடைக்கும். சிவ சேனைக்கு 51லிருந்து 61 வரையிலும், காங்கிரஸýக்கு 38 முதல் 48 வரையிலும், தேசியவாத காங்கிரஸூக்கு 31 முதல் 41 வரையிலும், எம்என்எஸ் மற்றும் பிற கட்சிகள், சுயேச்சைகளுக்கு 9 முதல் 15 வரையிலான இடங்களும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply