தேநீர் விற்றவர் பிரதமராக முடிந்தாள் என்னால் ஆக முடியாதா என்று உத்தவ் தாக்கரே கூறியிருப்பது சிவசேனாவின் கருத்து தரம்தாழ்ந்து இருப்பதையே காட்டுகிறது என்று பாஜக கருத்து தெரிவித்துள்ளது.

சிவசேனாவின் அதிகாரப் பூர்வ பத்திரிகையான சாம்னாவில் அந்த கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவின் நேர்காணல் நேற்று வெளியானது.

அதில், "தேநீர்விற்றவர் நாட்டின் பிரதமராக முடியும் என்றால், மக்கள் மனது வைத்தால் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிராவின் முதல்வர் ஆகலாம்.

மகாராஷ்டிராவில் மோடி மறைமுக அரசுநடத்த நினைக்கிறார். டெல்லியிலிருந்து வரும் கட்டளைக்கு ஆட்டம்போடும் அரசை இங்கு அமைக்க நினைக்கிறார். ஆனால் மாகாராஷ்டிர மண்ணில் அவரது நினைப்பு செல்லாது என்று அவர் கூறியிருந்தார்.

இந்தநிலையில் சிவசேனாவின் கருத்து தரம் தாழ்ந்திருப்பதாக பாஜக கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த கட்சியின் மகாராஷ்டிர மாநிலத்தலைவர் தேவேந்திர ஃபத்நவிஸ் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் சிவசேனா கட்சி பாஜக-வை விமர்சித்த விதம் தரைக்குறைவாக உள்ளது. மகாராஷ்டிரத்தின் அரசியல் சித்தாந்தம் இந்தளவுக்கு கீழ்த்தரமாக இருந்ததே இல்லை என தெரிவித்தார். 

Leave a Reply