பிரதமர் நரேந்திரமோடி, முப்படை தளபதிகளான அருப்ராஹா (விமானப் படை), தல்பீர்சிங் சுஹாக் (ராணுவம்), ஆர்.கே. தொவான் (கடற்படை) ஆகியோருடன் நாளை (வெள்ளிக்கிழமை) டெல்லியில் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

அப்போது அவர் நாட்டிலும், நாட்டைச் சுற்றிலும் உள்ள பாதுகாப்பு நிலவரம், எந்தவொரு சவாலையும் எதிர் கொள்ளத்தக்க அளவிலான தயார் நிலையில் முப்படைகள் இருக்கின்றனவா என்பதை முழு மையாக ஆராய்வார்.

ராணுவ தலைமையகத்தில் 'வார்ரூம்' என்றழைக்கப்படுகிற போர் அறையில், பிரதமர் பதவி ஏற்றபிறகு முப்படை தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நடத்துகிற முழு அளவிலான முதல் ஆலோசனை இது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply