மருத்துவப் படிப்பு இடங்களுக்கான தேவையைகருதி, மருத்துவக் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான விதி முறைகளை தளர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் இது குறித்து மேலும் கூறியதாவது, "அதிக மருத்துவக் கல்லூரிகளின் தேவையை நான் உணர்ந்துள்ளேன். எனவே அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குவ தற்கான விதிமுறைகள் தளர்த்தப்படும். தரத்தை சமரசம் செய்து கொள்ளாமல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

மத்திய அரசால் தேசியசுகாதார உறுதியளிப்பு இயக்கம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதில் மருத்துவ காப்பீடுதிட்டமும் உள்ளது. இத்திட்டத்தில் வறுமை கோட்டுக்குகீழ் இருக்கும் மக்களுக்கான பிரிமியம் தொகையை அரசேசெலுத்தும்.

வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ள மக்கள், குறைந்தளவில் பிரிமியம் செலுத்தும் திட்டத்தில் சேர்க்கப் படுவார்கள். இதற்காக மருத்துவ காப்பீடு நிறுவனங்களுடன் அரசு பேச்சுநடத்தும்" என்றார்.

Leave a Reply