இந்தியாவுக்கு எதிராக போராடுமாறு காஷ்மீரில் உள்ளவர்களை தூண்டவேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரபின் விஷம பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் தொலைக் காட்சிக்கு பேட்டியளித்திருந்த முஷாரப், காஷ்மீரில் இந்தியாவுக்கு எதிராக சிலர் போராடி வருவதாகவும். அவர்களை பாகிஸ்தான் தூண்டிவிட வேண்டியது அவசியம் என்று கூறிய முஷாரப், ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டி கொண்டிருக்க கூடாது என தெரிவித்துள்ளார்.

முஷாரப்பின் இந்தபேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக, அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் மனித நேயத்திற்கு எதிராகவும் முஷாரப் செயல் படுவதாக குற்றம்சாட்டியுள்ளது.

இந்தவிவகாரத்தில் எச்சரிக்கை யுணர்வுடன் செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, காஷ்மீர் பிரச்னையில் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படவேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a Reply