கங்கை நதியைத் தூய்மைப் படுத்தும் பணிக்கு மாநில அரசுகள் உதவவேண்டும் என்று, மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாஜக தலைமையிலான மத்திய அரசு, கொடுத்த வாக்குறுதிப் படி கங்கை நதியைத் தூய்மைப் படுத்த அமைச்சர் உமா பாரதி தலைமையில் ஒருகமிட்டியை அமைத்து நிதியும் ஒதுக்கியுள்ளது மத்திய அரசு கமிட்டியும் தமது பணிகளைத் துவக்கிவிட்ட நிலையில், கங்கை நதியைத் தூய்மைப் படுத்தும் பணியில் மாநில அரசுகளும் இணைந்து கொள்ள வேண்டும் என்று உமா பாரதி, வெங்கைய நாயுடு இருவரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதாவது நதிகள் ஓடும்மாநிலங்கள் கங்கை நதியைத் தூமைப்படுத்தும் இந்ததிட்டத்தில் பங்கேற்கலாம் என்றும், அதற்கான விளக்கவரைவு அறிக்கைத் தயார்செய்யப்பட்டு நதிகள் ஓடும் மாநில அரசுகளுக்கு இவ்வாறான உதவிவேண்டும் என்று கேட்டு அறிக்கை அனுப்பி வைக்கப்படும் என்றும் இருவரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply