இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தூய்மை இந்தியா திட்டத்திற்கு தனக்கு அழைப்பு விடுத்த தற்காகவும் அந்த திட்டத்தில் பங்கேற்ற தன்னை பாராட்டிய தற்காகவும் நன்றி தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த அக்டோபர் 2 ம் தேதி காந்திஜெயந்தியை முன்னிட்டு தூய்மை இந்தியா என்ற புதியதிட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி குப்பைகளை அகற்றி தெருவையும் சுத்தப்படுத்தினார்.

மேலும் சச்சின் உள்பட சில பிரபலங்களுக்கு தூய்மைதிட்டத்தில் பங்கேற்கவும் அழைப்பு விடுத்தார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த திட்டத்தில் தன்னை ஈடுபடுத்திகொண்ட சச்சின் தனது நண்பர்களுடன் தெருவில் தேங்கிய குப்பைகளை சுத்தம்செய்தார். இதில் சச்சின் இணைந்ததற்காக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் கூறுகையில், சிறந்தபணியை சச்சின் செய்து உள்ளார். சச்சினின் இச்செயல் தூய்மை திட்டத்துக்கு பெரும் ஆதரவை பெற்றுதரும் என்றார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சச்சின் டெண்டுல்கர் தனது மனைவி அஞ்சலியுடன் சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

சான்சத் ஆதர்ஷ் கிராம்யோஜனா திட்டத்தின் கீழ் தானும் ஒரு கிராமத்தை தத்தெடுக்க போவதாக கூறிய சச்சின் டெண்டுல்கர், அந்தகிராமத்தில் உள்ள பள்ளி மட்டுமல்லாது, பள்ளிகள், கல்லூரிகளில் விளையாட்டுத் துறையை முன்னேற்றும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள போவதாகவும் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 11ம் தேதி சான்சத் ஆதர்ஷ் கிராம்யோஜனா என்ற திட்டத்தை துவங்கி வைத்தார்.கட்சிபாகுபாடு இன்றி ஒவொரு எம்.பியும் 3 கிராமங்களை மேம்படுத்தினால் 2019ம் ஆண்டிற்குள் 2500 கிராமங்கள் மேம்பாடு அடைந்து விடும். இந்ததிட்டத்தை பயன்படுத்தி, எம்.எல்.ஏ.,க்களும் கிராமப்புறங்களில் மேம்படுத்த முயற்சிக்கலாம் என தெரிவித்தார். இப்போது இந்த திட்டத்தின் கீழ் தன்னையும் இணைத்துக்கொண்டுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

Leave a Reply