மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் வெள்ளிக் கிழமை தனது புதியபடமான "ஹேப்பி நியூ இயர்' படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் ஷாருக்கான் கலந்து கொண்டார். அப்போது, நாட்டில் பாஜக தலைவரும், பிரதமருமான நரேந்திரமோடி பிரபலமாகியுள்ளது போல், திரைத் துறையில் நீங்கள் பிரபலமடைந்துள்ளீர்கள்; இது, குறித்த உங்களது கருத்து என்ன? என்ற கேள்விக்கு ஷாருக்கான் கூறியதாவது

பிரதமர் நரேந்திரமோடி நாட்டில் முக்கிய தலைவராக உள்ளார். பெருவாரியான மக்கள் அவரை நேசிக்கின்றனர். ஆகையால், அவருடன் என்னை ஒப்பிடுவது பெருமை தருகிறது . நாட்டை முன்னேற்றப் பாதையில் மோடி கொண்டு செல்லவேண்டும் என்று மக்களாகிய நாம் விரும்புகிறோம்.

அதேபோல் நாட்டை மகிழ்வுடன் நான் வைத்துக் கொள்ள வேண்டும் என்று மக்கள் எதிர் பார்க்கின்றனர். மோடியுடன் என்னை ஒப்பிடுவது புதிதாக இருந்தாலும், அதை நான் பெருமையாக கருதுகிறேன். இது போன்று ஒப்பிட்டு கூறுவது, எனக்கு மகிழ்ச்சி தருவதாக இருந்தாலும், இதுசரியல்ல என்றே கருதுகிறேன். ஏனென்றால், எனது துறைவேறு, மோடியின் துறைவேறு என்றார் ஷாருக்கான்.

Leave a Reply