அரசு பங்களா எதுவும் இனிமேல் நினைவகமாக மாற்றப்பட மாட்டது என்று தில்லியில் சனிக் கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப் பட்டது.

இந்த கூட்டத்தில் மற்றொரு முக்கியமுடிவும் எடுக்கப்பட்டது. அதன்படி, மகாத்மா காந்தியின் பிறந்ததினம், மறைவு தினம் மட்டுமே மத்திய அரசால் அனுசரிக்கப் படும். மறைந்த மற்ற அரசியல் தலைவர்களின் பிறந்த தினமும், நினைவு தினமும் அவர்கள் தொடர்புடைய கட்சிகள், ஆதரவாளர்கள், அறக் கட்டளைகளால் மட்டுமே அனுசரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஷ்ட்ரீய லோக் தளத் தலைவர் அஜித்சிங், தனது தந்தையும், முன்னாள் பிரதமருமான சரண்சிங் வாழ்ந்த தில்லி, துக்ளக் சாலையில் உள்ள அரசு பங்களாவை நினைவகமாக மத்திய அரசு மாற்றவேண்டும் என்று வலியுறுத்தி அண்மையில் போராட்டம் நடத்தினார். இது பெரும்சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மத்திய அரசு மேற்கண்டமுடியை எடுத்துள்ளது.

Leave a Reply