மராட்டிய, அரியானா சட்ட சபை தேர்தல்களில் பாஜக வெற்றிபெற்றதை தொடர்ந்து, அந்தகட்சியின் ஆட்சி மன்றக் குழு கூட்டம் டெல்லியில் நடந்தது. தேர்தல்வெற்றிக்காக கட்சித் தலைவர் அமித் ஷாவுக்கு மலர்க் கொத்து அளித்து பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துதெரிவித்தார்.

மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளையடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பாஜக., ஆட்சி மன்றக்குழு கூட்டம் நடந்தது. இந்தக்கூட்டத்தில், தேர்தல்முடிவு குறித்து பிரதமர் மோடியிடம் விளக்கமாக எடுத்துக் கூறப்பட்டது எனவும் பா.ஜ., தலைவர் கூறினார். மேலும் அவர், சிவ சேனாவை நாங்கள் தொடர்பு கொள்ளவில்லை எனவும், முதலில் அங்கு தங்கள் தலைவரை தேர்வுசெய்ய வேண்டும் எனவும், மற்றவிஷயங்கள் இதன் பின்னர்தான் ஆலோசனை செய்யப்படும் என கூறினார்.

Tags:

Leave a Reply