மராட்டியம் மற்றும் அரியானா இரு மாநிலங்களிலும் பாஜக ஆட்சி அமைக்கும் மேலும் காங்கிரஸ் இல்லாத பாரதம் என்ற கனவு விரைவில் நனவாகும் என அமித்ஷா கூறியுள்ளார்.

இரு மாநிலங்களிலும் 3-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது காங்கிரஸ் தேர்தல்முடிவு குறித்து டெல்லியில் பாஜக தலைவர் அமித்ஷா கூறியுள்ளார். பாஜக மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவோம் மே-லும் மராட்டியம் மற்றும் அரியானாவில் மாற்றுத்துக்காக மக்கள் வாக்களித்துள்ளனர். நாட்டின் நரேந்திரமோடி அலை இன்னும் வீசிக் கொண்டு இருக்கிறது . நாட்டின் தன்னிகரில்லா தலைவராக மோடி உருவெடுத்துள்ளார் . மோடி மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் அடையாளமே தேர்தல்முடிவுகள் .

மராட்டியத்தில் சிவசேனை உடனான கூட்டணியை பாஜக. முறிக்கவில்லை. சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் ஏற்க முடியாத கோரிக்கைகளை வைத்தது சிவசேனை மேலும் மும்பை மாநகராட்சியில் பாஜக.வுடன் கூட்டணியில் உள்ளது. சிவசேனை உடனான கூட்டணி முறிந்ததாக கருதவில்லை என அமித் ஷா விளக்கம் அளித்தார். சிவசேனை ஒதுக்குவதாக கூறியதைவிட அதிக தொகுதிகளில் பா.ஜ.க. வென்றுள்ளதுஎன்றார்.

Tags:

Leave a Reply