மகாராஷ்டிராவில் நடந்த லோக் சபா இடைத் தேர்தலில், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேயின் மகள், பிரீதம்முண்டே, ஆறுலட்சத்து, 96 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று புதிய சாதனை படைத்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் பீட்லோக்சபா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கோபிநாத் முண்டே, மத்திய அமைச்சராக பொறுப்பேற்ற சிலநாட்களில், டில்லியில் சாலைவித்தில் பலியானார்.இதையடுத்து, மாநில சட்டசபை தேர்தலுடன், பீட் லோக்சபாவுக்கான இடைத் தேர்தலும் நடைபெற்றது. பாஜக., சார்பில், கோபிநாத் முண்டேயின் மகள், பிரீதம்முண்டே, களம் இறக்கப்பட்டார். இவரை எதிர்த்து, காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் அமைச்சர், அசோக்பாட்டீல் களம் இறக்கப்பட்டார். இந்ததேர்தலில், பிரீதம் முண்டே, 9 லட்சத்து, 22 ஆயிரத்து416 ஓட்டுகள் பெற்று அமோக வெற்றிபெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட, அசோக்பாட்டீலுக்கு, 2 லட்சத்து, 26 ஆயிரத்து 95 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன.

Leave a Reply