தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி வருகிற 26தேதி தேநீர்விருந்து அளிக்கிறார். இதில், சிவசேனா எம்.பி.க்களும் கலந்து கொள்கிறார்கள்.

மராட்டியம் மற்றும் அரியானா சட்ட சபை தேர்தலில் பாஜக அமோக வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வருகிற 26தேதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்களுக்கு டெல்லியில் தேநீர்விருந்து அளிக்கிறார்.

இந்தவிருந்தில் மத்திய அமைச்சர் ஆனந்த் கீதே உள்ளிட்ட சிவசேனா எம்.பி.க்கள் கலந்து கொள்கிறார்கள். மத்தியில் பா.ஜ. க ஆட்சி பொறுப்பேற்று நரேந்திர மோடி பிரதமர் ஆனதை தொடர்ந்து, அவர் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களுடன் கலந்துரையாடும் முதல் நிகழ்ச்சி இதுவாகும்.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஆனந்த்கீதே கூறுகையில், ''பிரதமர் நரேந்திர மோடி வருகிற 26ந் தேதி மாலை தனது இல்லத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களுக்கு தேநீர்விருந்து தருவதாக எங்களுக்கு அழைப்பு விடுத்தார். தேசிய ஜனநாயக கூட்டணியில் சிவசேனாவும் அங்கம்வகிப்பதால், நான் உள்பட எங்கள் கட்சியை சேர்ந்த அனைத்து எம்.பி.க்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்போம்'' என்றார். எனினும், மராட்டிய அரசியல் சூழ்நிலை அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

Tags:

Leave a Reply