கூட்டணி வியூகம் அமைப்பது என்பது மிகமுக்கியமான அம்சம் என்பதை மகாராஷ்டிர தேர்தல் தங்களுக்கு பாடம் கற்பித்துள்ளதாக, பா.ஜ.க.,வின் தேசியத் தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

பாஜக.,வின் தேசியத் தலைவர் பதவி என்பது எனக்கு இன்னமும் நிறைவு தரவில்லை , மேற்குவங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களிலும் பாஜக தடம் பதித்தால் தான், எனது பாஜக தேசியத் தலைவர் பதவி நிறைவடையும்.

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கூட்டணி அமைப்பது என்றால் மாநிலத்தின் களஆய்வு என்பது மிகத்திறமையான முறையில் இருக்கவேண்டும் , எதிர்த்து நிற்பவரின் பலம் என்ன என்பது முழுமையாக தெரிந்து கொண்ட பின்னரே பாஜக பிரமுகரை நிறுத்தவேண்டும் என்பது மகாராஷ்டிர தேர்தல் கற்றுக் கொடுத்த பாடம்.

மாநிலங்களுடனான கூட்டணிக்கு சிறந்தவியூகம் அமைப்பது என்பது மிக முக்கியமானது என்றும் சமீபத்தியத் தேர்தல் கற்றுக்கொடுத்து உள்ளதாகவும் பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

Leave a Reply