வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தை மீட்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி, மூத்த வக்கீல் ராம்ஜெத்மலானி, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார். அம்மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கறுப்பு பண மீட்பு தொடர்பான விசாரணையை கண்காணிக்க சிறப்பு புலனாய்வு குழுவை 3 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால்,

முந்தைய மன்மோகன்சிங் அரசு, 3 வாரங்களுக்குள் அக்குழுவை அமைக்கவில்லை. இதையடுத்து, சிறப்பு புலனாய்வு குழு அமைப்பதற்கான கால அவகாசத்தை சுப்ரீம் கோர்ட்டு நீட்டித்தது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை மே மாதம் 27–ந் தேதி முதன்முதலாக கூடியது. அதில் வெளிநாட்டு வங்கிகளில் குவிக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்கவும், அது தொடர்பான வழக்குகளில் புலனாய்வு செய்யவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க அதிரடி முடிவு எடுக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி எம்.பி. ஷா தலைமையில் அந்த குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவில் வருவாய் துறை, ரிசர்வ் வங்கி, உளவுத்துறை (ஐ.பி.), அமலாக்கப்பிரிவு இயக்குனரகம், சி.பி.ஐ., வருமான வரித்துறை, போதைப்பொருள் கட்டுப்பாட்டு முகமை, வருவாய் புலனாய்வு பிரிவு, நிதி புலனாய்வு பிரிவு, வெளிநாடுகளுக்கான ரா என்னும் உளவு அமைப்பு, வெளிநாட்டு வரி மற்றும் வரி ஆராய்ச்சி பிரிவு ஆகிய 11 துறைகளைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் உள்ள எச்.எஸ்.பி.சி. வங்கியில் ரகசிய கணக்கு வைத்திருக்கும் 627 இந்தியர்களின் பெயர் பட்டியலை மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி மூடி முத்திரையிட்ட 3 உறைகளை சுப்ரீம் கோர்ட்டில் ஒப்படைத்தார். அந்த பெயர் பட்டியலை சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் ஒப் படைத்த சுப்ரீம் கோர்ட்டு, வரும் மார்ச் மாதத்துக்குள் இது தொடர்பான முழு விசாரணையையும் நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து தற்போது அனைவரது கவனமும் சிறப்புப் புலனாய்வுக் குழு மீது திரும்பியுள்ளது. நீதிபதி எம்.பி.ஷா தலைமையிலான இந்த குழு இன்றே தனது பணிகளைத் தொடங்கி உள்ளது.

நீதிபதி எம்.பி.ஷா இது பற்றி கூறுகையில், 'சுவிட் சர்லாந்து வங்கியில் பணம் வைத்திருக்கும் 627 இந்தியர்கள் பற்றிய பட்டியல் எங்களுக்கு புதிய ஒன்று அல்ல. ஏற்கனவே இந்த பட்டியலை கடந்த ஜூன் மாதமே மத்திய அரசு எங்க ளிடம் கொடுத்து விட்டது' என்றார். அவர் மேலும் கூறுகையில், சுப்ரீம் கோர்ட்டு விதித் துள்ள காலக்கெடுவுக்குள் இது குறித்த எல்லா விசா ரணைகளையும் நடத்தி முடித்து விட முடியும் என்று நம்புகிறோம். ஆனால் இது சாதாரணமான வேலை அல்ல. மிக, மிக கடினமானது' என்று கூறினார்.

இந்த நிலையில் சுவிட்சர்லாந்து வங்கியில் பணம் வைத்து இருப்பவர்கள் பற்றி பொதுமக்களுக்கு ஏதேனும் தகவல் தெரிந்தால் அதுபற்றி எங்களுக்கு தெரி விக்கலாம் என்று சிறப்புப்புபலனாய்வுக் குழு சார்பில் இன்று அறிவிப்பு வெளி யிட்டுள்ளது. இது தவிர அமலாக்கத் துறையின் ஒத் துழைப்பையும் சிறப்புப் புலனாய்வுக் குழு கேட்டுள் ளது.
வரி கட்டாமல் வெளி நாட்டு வங்கிகளில் பணம் வைத்திருப்பவர்கள் பற்றி தகவல்கள் சேகரிக்க புல னாய்வுக் குழு உறுப்பினர் களுக்கு பிரத்யேக இ.மெயில் ஐ.டி.கள் உருவாக்கிக் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த இ.மெயில் ஐ.டி.களில் கருப்புப் பணம் பதுக்கல் தொடர்பான தகவல்களை அனுப்பலாம் என்று அறிவிக் கப்பட்டுள்ளது.
அதன்படி இ.மெயில் ஐ.டி.க்கள் வெளியிடப்பட உள்ளது.

இதற்கிடையே சிறப்புப் புலனாய்வுக் குழுவின் கூட் டம் டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) நடந்தது. அந்த கூட்டத்தில் 627 இந்தியர்களின் கருப்புப் பணம் தொடர்பான விசா ரணையை தொடங்குவது பற்றி முடிவுகள் எடுக்கப்பட் டன. கடந்த 2011-ம் ஆண்டு ஜெனீவாவில் உள்ள எச். எஸ்.பி.சி. வங்கியில் பணம் வைத்திருக்கும் 220 இந்தியர்கள் பற்றி தகவல்களை ஏற்கனவே சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது. இந்த 220 இந்தியர்களின் கருப்பு பணம் பற்றிய அறிக்கையை இன்னும் சில வாரங்களில் சுப்ரீம் கோர்ட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு தாக்கல் செய்ய உள்ளது.

Leave a Reply