டெல்லி ஜிம்மா மசூதியின் அடுத்த இமாமாக தனதுமகனை அறிவிக்கும் விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடியை அழைக்காத தற்போதைய இமாம் சையது அகமது புகாரி, பாகிஸ்தான் அதிபர் நவாஸ் ஷெரிப்பை அழைத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் தனதுசெயல் நியாயமானது தான் என்று புகாரி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் புகழ் பெற்ற ஜிம்மா மசூதி உள்ளது. இதன் இமாமாக தற்போது சையது அகமதுபுகாரி உள்ளார். இவரது 19 வயது மகன் சபான்புகாரி அடுத்த இமாமாக அறிவிக்கப்பட உள்ளார். இதற்கான விழா நவம்பர் மாதம் 22ம் தேதி ஜிம்மா மசூதியில் வைத்து நடை பெறுகிறது.

இந்த விழாவில் பங்கேற்க வருமாறு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சோனியா காந்தி ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் அவரது தந்தை முலாயம் சிங் உள்ளிட்ட பல வி.ஐ.பி.,களை அழைத்துள்ளார் புகாரி.

அதேபோல அண்டை நாட்டு தலைவர்களையும் அழைத்துள்ளார். அதில் முக்கிய மானவர், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப். அதேநேரம் இந்திய பிரதமருக்கு புகாரி அழைப்பு விடுக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனிடையே இமாமானின் கருத்துக்கு இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தியமுஸ்லிம் தனிநபர் சட்டவாரிய உறுப்பினர் கமால் பரூக்கி கூறுகையில், இமாமின் கருத்தால், ஒட்டுமொத்த இஸ்லாமியர்களுக்கும் கெட்டபெயர் ஏற்பட்டுவிடும். இது ஒன்றும் தனிநபர் விழா அல்ல , இமாம் தனது இஷ்டப்படி விருந்தினர்களை அழைப்பதற்கு… என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதே போல இஸ்லாமிய தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இஸ்லா மியர்களின் ஒட்டு மொத்த பிரதி நிதி புகாரி கிடையாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

Leave a Reply