டெல்லியில் ஆட்சியமைக்க விருப்பம் இல்லை என பாஜக துணை நிலை ஆளுநரிடம் தெரிவித்துள்ளது. புதிய அரசு அமைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து அனைத்து கட்சிகளுடன், டெல்லி துணைநிலை ஆளுநர் ஆலோசனை நடத்த திட்டமிட்டிருந்தார் . இந்நிலையில், பாரதிய ஜனதா

மாநில தலைவர்களான சதீஷ் உபாத் யாய் மற்றும் ஜெகதீஷ்முகி ஆகியோர் துணை நிலை ஆளுநரை சந்தித்து, கட்சியின் முடிவைக் தெரிவித்தனர்.

டெல்லியின் அரசியல் நிலவரம் குறித்து பாஜக மூத்த தலைவர்கள், பிரதமர் மோடியுடன் நேற்று மாலை ஆலோசனை நடத்தினர். அப்போது, போதிய பெரும்பான்மை இல்லாத நிலையில் டெல்லியில் ஆட்சியமைக்க வேண்டாம் என பிரதமர் தெரிவித்தார். எனவே, தேர்தலை சந்திக்க பாரதிய ஜனதா தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply