பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது. டெல்லி அரசியல் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லியில் மறு தேர்தல் நடத்த பாஜக உட்பட அனைத்து கட்சிகளும் விருப்பம் தெரிவித்துள்ளதை தொடர்ந்து, டெல்லி சட்டப்பேரவையை கலைக்க பரிந்துரைத்து குடியரசு தலைவருக்கு துணை நிலை ஆளுநர் நஜீப்ஜங் அறிக்கை அனுப்பினார்.

இந்நிலையில், டெல்லியில் தேர்தலை எதிர் கொள்வது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply