இந்திய பிரதமர் நரேந்திர மோடியை குறித்து யார் என்ன சொன்னாலும், அவர் ஒரு நேர்மையான மனிதர் என தெகரிக் இ இன்சாப் கட்சியின் தலைவரும், பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்

இம்ரான் கான். அந்நாட்டு கிரிக்கெட் அணிக்காக கடந்த 1992ம் ஆண்டு உலகக் கோப்பையை பெற்றுத்தந்தவர். பின்னர் கிரிக்கெட்டிலிருந்து விலகிய இம்ரான்கான் தற்போது தெகரிக் இ இன்சாப் என்ற கட்சியை நடத்திவருகிறார்.

இந்நிலையில், தற்போது இந்தியாவில் கறுப்புபணத்தை மீட்க நடவடிக்கை எடுத்துவரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு இம்ரான்கான் பாராட்டு தெரிவித்துள்ளார்.இது குறித்து இம்ரான் கான் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி குறித்து யார் என்ன சொன்னாலும் , அவர் ஒருநேர்மையான மனிதர். கறுப்பு பணத்தை மீட்பதற்காக நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். இந்தியாவை போன்றே பாகிஸ்தானிலும், வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப் பட்டுள்ள கறுப்புபணத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Leave a Reply