பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலைமிரட்டல் விடுத்த தலீபான் தீவிரவாதிகளுக்கு நேற்று சிவசேனா கட்சி கடும்கண்டனம் தெரிவித்துள்ளது . அது மட்டுமல்லாமல், பிரதமரின் வழியில் குறுக்கிடகூடாது என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

இந்தியா– பாகிஸ்தான் இடையே உள்ள வாகா எல்லையில் கடந்த ஞாயிற்று கிழமை மனிதவெடிகுண்டு நடத்தி தாக்குதலில், 61 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தலீபான் இயக்கத்திலிருந்து பிரிந்த பாகிஸ்தான் ஜமாத் அரார் இயக்கம் பொறுப்பு ஏற்றுக்கொண்டது இதையடுத்து, அந்த இயக்கத்துக்கு பிரதமர் நரேந்திரமோடி கடும் கண்டனம் தெரிவித்தார்.

அதன் பின்னர், தலீபான் தீவிரவாத இயக்கம் சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டது. நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், தலீபான் தீவிரவாதிகளுக்கு சிவசேனா கட்சி கடும்கண்டனம் தெரிவித்தது. இதுதொடர்பாக அக்கட்சி பத்திரிகையான சாம்னாவின் தலையங்கத்தில் கூறி இருப்பதாவது:–

பிரதமர் நரேந்திர மோடியின் பாதையில் தலீபான்கள் குறுக்கிடகூடாது. இதில், அவர்களது நலன் அடங்கியயுள்ளது . மேலும், பிரதமரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம்.

பிரதமர் நரேந்திர மோடி இந்துத்வாவின் தீவிர ஆதரவாளர் என்பதால், அவர் தலீபான்களின் தாக்குதல்பட்டியலில் இருக்கிறார். தவிர, பிரதமராக பதவி ஏற்றபின்னர், அவர் கங்கை நதிக்கரையில் ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தி இந்துத்வா மீதான தனது நிலைபாட்டை வெளிப்படுத்தினார். இதிலிருந்து பிரதமர் முஸ்லீம்களுக்கு எதிரான நிலைபாட்டை கொண்டிருக்கிறார் என்று கூறமுடியாது.

இஸ்லாம் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ் தான் நாடுகளை சேர்ந்த பெண்களும், மூத்த குடிமக்களும் கணக்கிலடங்காத அட்டூழியங்களுக்கு ஆளானார்கள். எனினும், இதனால் தலீபான்களுக்கு எந்தபாதிப்பும் ஏற்படவில்லை. அதேசமயம், இந்தியாவில் முஸ்லிம்களின் கொலைக்கு அவர்கள் கண்டனம் தெரிவிப்பது கேலிக் கூத்தாக இருக்கிறது என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

Leave a Reply