பாஜக தலைவர் அமித்ஷாவின் சகோதரி ஆர்.பி.ஷா கண் வலி காரணமாக அவதிப்பட்டு வந்தார். அவருக்கு சென்னை நுங்கம் பாக்கத்தில் உள்ள சங்கரா நேத்ராலயா கண் மருத்துவ மனையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

நேற்று காலை ஆர்.பி.ஷாவுக்கு அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சகோதரியை பார்ப்பதற்காக அமித்ஷா, நேற்றிரவு 12 மணிக்கு விமானம்மூலம் சென்னை வந்திருந்தார். நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் நட்சத்திர ஓட்டலில் சென்று தங்கிய அவர் காலை 10 மணிக்கு சங்கரா நேத்ராலயா ஆஸ்பத்திரிக்கு சகோதரியை பார்க்கச்சென்றார்.

அவரை மருத்துவமனையின் சேர்மன் பத்ரிநாத் வாசலில் நின்று வரவேற்று உள்ளே அழைத்துச்சென்றார். சகோதரி ஆர்.பி. ஷாவுக்கு நடைபெற்ற கண் ஆபரேஷனை அமித் ஷா அருகிலிருந்து கவனித்தார்.

கண் ஆபரேஷன் முடிந்து சாதாரணவார்டுக்கு ஆர்.பி.ஷா திரும்பினார். இதனால் நேற்று மாலையே அமித்ஷா டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

Leave a Reply