திறந்தவெளி கழிப்பு முறையை ஒழிக்க உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாநில முதல்வர்களையும் மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் நிதின் கட்காரி வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அவர் கடிதம் அனுப்பியுள்ளார். அதன் விவரம் வருமாறு:

மனித கழிவுகளை அறிவியல் முறையில் அப்புறப் படுத்தும் முறைகளுக்கு முன்னுரிமை அளித்து அவற்றை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கடந்தமாதம் பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்திய தூய்மை இந்தியா பிரச்சாரத்தில் தெரிவிக்கப் பட்டுள்ள ஷரத்துக்களை கருத்தில்கொண்டு சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல வேண்டும். ஊரக பகுதிகளில் தனி கழிப் பறையை பயன்படுத்துமாறு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என அந்த கடிதத்தில் நிதின்கட்காரி தெரிவித்துள்ளார். திறந்தவெளி கழிப்புமுறையை ஒழிக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக தனி கழிப் பறையை அமைக்க அரசு அளிக்கும் உதவி தொகையை ரூ. 10 ஆயிரத்திலிருந்து ரூ. 12 ஆயிரமாக மத்திய அமைச்சர் நிதின்கட்காரி உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply