நடிகர் கமலஹாசன் நேற்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடினார். தனது பிறந்த நாளையொட்டி பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தையும் சென்னையில் தொடங்கிவைத்தார் கமல்.

சென்னை, ராஜகீழ்ப் பாக்கம் அருகே உள்ள மாடம்பாக்கம் ஏரியை அவர் தூய்மைப் படுத்தும் பணியை தொடங்கினார். அவரும், அவரது நற்பணிமன்றத்தை சேர்ந்தவர்களும் தமிழகத்தில் மேலும் 25 ஏரிகளை தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபட உள்ளதாக கமல் கூறினார்.

இக்கூட்டத்தில் பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இது குறித்து மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியதாவது; தேசிய உணர்வுகொண்ட நடிகர்கள் அரசியலுக்கு வருவதை பாஜக வரவேற்கிறது கமல் ஹாசனை அரசியலுக்கு வரச்சொல்லி தர்மசங்கடத்திற்கு ஆளாக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.

Leave a Reply