மத்திய அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு, தரைவழி போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல்துறை ராஜாங்க மந்திரியாகவும் மனோகர் பாரிக்கருக்கு ராணுவ இலாகாவும், சுரேஷ் பிரபுவுக்கு ரெயில்வே இலாகாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய மந்திரிசபை விஸ்தரிக்கப்பட்டது. 21 புதிய மந்திரிகள் பதவி ஏற்றனர். அவர்களுக்கான இலாகாக்கள் அறிவிக்கப்பட்டன. அத்துடன், பழைய மந்திரிகள் சிலருக்கு இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:–

கோவா முதல்–மந்திரியாக இருந்து மத்திய மந்திரி ஆகியுள்ள மனோகர் பாரிக்கர் ராணுவ மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். சதானந்த கவுடாவிடம் இருந்த ரெயில்வே இலாகா, சுரேஷ்பிரபுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சதானந்த கவுடாவுக்கு சட்ட இலாகா அளிக்கப்பட்டுள்ளது. அதை ரவிசங்கர் பிரசாத் கூடுதல்பொறுப்பாக கவனித்து வந்தார்.

அருண் ஜெட்லி, நிதி, கார்ப்பரேட் விவகாரத்துடன் கூடுதலாக தகவல் ஒலிபரப்பு இலாகா அளிக்கப்பட்டுள்ளது.

பொன்.ராதாகிருஷ்ணன், தரைவழி போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் துறை ராஜாங்க மந்திரியாக மாற்றப்பட்டுள்ளார்.

ஹர்ஷவர்தன் வசம் இருந்த சுகாதாரத் துறை, ஜே.பி.நட்டாவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. பிரேந்திர சிங், ஊரக வளர்ச்சித் துறை மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நிர்மலா சீத்தாராமன், கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்த நிதித்துறை ராஜாங்க மந்திரி பொறுப்பு, ஜெய்ந்த் சின்காவிடம் அளிக்கப்பட்டுள்ளது. தகவல் ஒலிபரப்பு ராஜாங்க மந்திரியாக ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதர மந்திரிகளும், இலாகாக்களும் வருமாறு:–

ஹர்ஷவர்தன்– அறிவியல் மற்றும் தொழில் நுட்பம்

ரவிசங்கர் பிரசாத்– தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பம்

ராஜீவ் பிரதாப் ரூடி– திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் மற்றும் பாராளுமன்ற விவகாரம் (தனிப்பொறுப்பு)

பண்டாரு தத்தாத்ரேயா– தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு (தனிப்பொறுப்பு)

மகேஷ் சர்மா– சுற்றுலா, கலாசாரம் மற்றும் சிவில் விமான போக்குவரத்து (தனிப்பொறுப்பு)

முக்தர் அப்பாஸ் நக்வி– சிறுபான்மையினர் நலன் மற்றும் பாராளுமன்ற விவகாரம் (இணை)

ராம் கிருபால்யாதவ்– குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றல் (இணை)

ஹரிபாய் பார்த்திபாய் சவுத்ரி– உள்துறை (இணை)

சன்வர்லால் ஜாட்– நீர்வளம், நதிமேம்பாடு, கங்கை புனரமைப்பு (இணை)

மோகன்பாய் கல்யாண்ஜிபாய் குந்தாரியா– வேளாண்மை (இணை)

கிரிராஜ் சிங்– சிறு குறு நடுத்தர தொழில்துறை

ஹன்ஸ்ராஜ் கங்காராம் அகிர்– ரசாயனம் மற்றும் உரத்துறை (இணை)

பாபுலால் சுப்ரியோ பரஸ்– நகர்ப்புற வளர்ச்சி (இணை)

மனுஷ்க்பாய் தாஞ்சிபாய் வாசவா– பழங்குடியினர் விவகாரம்

ராம் சங்கர் கதேரியா– மனிதவள மேம்பாடு

ஒய்.எஸ்.சவுத்ரி– அறிவியல், தொழில்நுட்பம் (இணை)

சாத்வி நிரஞ்சன் ஜோதி– உணவு பதப்படுத்துதல் தொழில் (இணை)

விஜய் சம்ப்லா– சமூக நீதி (இணை)

Tags:

Leave a Reply