மதுரை அண்ணா நகரில், குப்பைதொட்டியில் இருந்து நேற்று, 11 நாட்டு வெடி குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இதன் பின்னணியில் பயங்கர வாதிகள் உள்ளனரா என, சந்தேகம் வலுத்துள்ளது. மதுரை நகரில், பல இடங்களில் வெடி குண்டுகளை வைக்க, பயங்கரவாதிகள் ஒத்திகை பார்த்தனரா என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு, பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருக்கும் நிலையில், சில ஆண்டுகளாகவே மதுரை நகரிலும், புற நகரிலும் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இதில் சில வெடிக்கவும் செய்தன. இதன் பின்னணியில் பயங்கரவாதிகள் சிலர் இருந்ததுதெரிந்தது. ஆனாலும் அதிகாரப் பூர்வமாக போலீஸ் தரப்பில் குற்றவாளிகள் குறித்த விவரம் தெரிவிக்கப்படவில்லை.

Leave a Reply