நாட்டிலேயே முதல்முறையாக, உள்ளாட்சி தேர்தல்களில் ஓட்டளிப்பதை கட்டாயமாக்கும் சட்டம், குஜராத்த்தில் அமல்படுத்தப்டுகிறது . இதற்கான சட்டத்துக்கு கவர்னர் ஒபி.கோலி ஒப்புதல் தந்துள்ளார். .குஜராத்தில், முதல்வர் ஆனந்தி பென் படேல் தலைமையிலான பாஜக., ஆட்சி நடக்கிறது. இங்கு, வாக்காளர்கள், உள்ளாட்சி தேர்தல்களில் ஓட்டளிப்பதை கட்டாயமாக்கும் சட்டமசோதாவுக்கு, அம்மாநில கவர்னர் ஒபி.கோலி ஒப்புதல் தந்துள்ளார்.

இதையடுத்து, 'உள்ளாட் சி தேர்தல்களில் ஓட்டளிப்பது கட்டாயம்' என குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தசட்டம், விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது.இந்தசட்டம் நடைமுறைக்கு வந்தால், உள்ளாட்சி தேர்தல்களில் கட்டாயம் அனைவரும் ஓட்டளிக்க வேண்டியிருக்கும். குறிப்பிட்ட காரணங்கள் இருந்தால் மட்டுமே ஓட்டளிப்பதை தவிர்க்கமுடியும்.

ஓட்டளிப்பது கட்டாயம் என்ற சட்ட நடை முறை, நம்நாட்டில், வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. குஜராத்தான், முதல் முறையாக அந்த பெருமையை பெறப்போகிறது.இத்துடன், உள்ளாட்சி தேர்தல்களில், பெண்களுக்கு, 50 சதவீத ஒதுக்கீடு வழங்கும் சட்டமும் குஜராத்தில் நடைமுறைக்கு வரவுள்ளது

Leave a Reply