மத்திய அமைச்சர்கள் விடுப்பில் செல்லக் கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி உத்தரவுவிட்டுள்ளார். மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப் பட்டதை தொடர்ந்து அமைச்சரவை கூட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி கூட்டினார். அந்த கூட்டத்தில் மோடி, மந்திரிகளுக்கு சில உத்தரவுகளை பிறப்பித்தார்.

அதில், "மக்கள் நலத் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணியாற்றுங்கள். சனி, ஞாயிறு மற்றும் பொதுவிடுமுறை நாட்களில்கூட நீங்கள் மக்களுக்காக பணியாற்ற வேண்டும்.

எந்த காரணத்தை கொண்டும் லீவு போட்டுவிட்டு, சுற்றுப் பயணம் செல்லக் கூடாது. அத்தகைய பொழுதுபோக்குப் பயணங்களை முழுமையாக தவிர்க்க வேண்டும்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இந்த மாத இறுதியில் தொடங்க உள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நீங்கள் அனைவரும் திறம்பட செயலாற்றுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

நாடாளுமன்ற கூட்டம் நடக்கும் நாட்களில் சுற்றுப்பயணம் செல்வதை தவிர்த்து விட்டு சபையில் இருக்கவேண்டும். கேள்வி நேரத்தில் உரியபதில்கள் சொல்ல நீங்கள் தயாராக இருக்கவேண்டும்.

எல்லா கேபினெட் மந்திரிகளும் தங்கள் துறை அமைச்சர்களிடம் நம்பிக்கையை உருவாக்கும் வகையில் பழகவேண்டும். அனைத்து கோப்புகளையும், இருவரும் சேர்ந்து ஆய்வுசெய்ய வேண்டும்.

நீங்கள் இணைந்து செயல்பட்டால் தான் அமைச்சர்களுக்கும் நமது அரசின் கொள்கைகள் முழுமையாக மனதில்பதியும். இதற்காக கேபினெட் அமைச்சர்கள் ஒவ்வொரு புதன்கிழமையும் அமைச்சர்களை சந்தித்துப் பேசுவதை வழக்கத்தில் கொள்ளவேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply