இந்தியாவை பிரிக்க, மேற்கத்தியநாடுகள் முயற்சிக்கின்றன. இதற்கு வாய்ப் பளிக்காமல், அனைவரும் ஒன்று சேரவேண்டும்,'' என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் அழைப்பு விடுத்துள்ளார்.

தும் கூருவில் சித்த கங்கா மடத்தில், 'உலக இந்துபரிஷத்' அமைத்து, 50 ஆண்டு நிறைவடைந்ததை ஒட்டி நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, ஆர்எஸ்எஸ்., தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது: தர்மத்தின் பாதையில் நாட்டை, முன்னடத்தி செல்லவேண்டும். இந்துதர்மம், உடைந்த கண்ணாடி போன்று ஆகிவிட்டது. இதை, ஒன்றுசேர்க்க முயற்சிக்க வேண்டும். மொத்த உலகத்துக்கும், வழிகாட்டக் கூடிய சக்தி, இந்திய நாட்டுக்கு உள்ளது. வெளிநாட்டினரால், இந்தியாவில் இந்து தர்மம் உடைந்துவிட்டது. இதை ஒருங்கிணைக்க வேண்டும். வெளிநாட்டினர், இந்தியமக்களை மதமாற்றம் செய்கின்றனர். இது போன்றவர்களுக்கு, நமதுதர்மம், கலாசாரத்தை நினைவூட்டி, மீண்டும் அவர்களை இந்து தர்மத்துக்கு அழைத்துவர வேண்டும். என்று மோகன் பாகவத் பேசினார்.

Leave a Reply