டெல்லியில் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜனதா தனிப் பெரும் பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

நீல்சன் மற்றும் தனியார் இந்திசெய்தி தொலைக் காட்சி நிறுவனங்கள் இணைந்து டெல்லியில் கருத்து கணிப்பு நடத்தின. அதில், மொத்தம் 70 தொகுதிகளை கொண்ட டெல்லியில் பாஜக 48 இடங்களுடன் தனிப் பெரும் பான்மைபெற்று ஆட்சி அமைக்கும் எனத் தெரியவந்துள்ளது.

மோடி அலை காரணமாக பாஜக வுக்கு 38 சதவீத வாக்குகள் கிடைக்கும் எனவும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த முறை 28 இடங்களில் வெற்றிபெற்ற ஆம் ஆத்மி கட்சி இம்முறை 18 தொகுதிகளுடன் இரண்டாம் இடம்பிடிக்கும் என கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. அதேசமயம் 2013 தேர்தலில் 27 சதவீத வாக்குகளை பெற்ற ஆம் ஆத்மி இம்முறை 26 சதவீத வாக்குகளைப்பெறும் எனத் தெரிகிறது.

காங்கிரஸ், 3-வது இடத்தை பெற்று அது 8 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றும் என கருத்து கணிப்பில் கூறப் பட்டுள்ளது. மற்ற கட்சிகளுக்கு ஒரு தொகுதி மட்டும் கிடைக் கும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply