வரும் நவம்பர் மாதம் 25ம் தேதி காஷ்மீர் மாநிலத்தில் சட்ட சபை தேர்தல் நடைபெறுகிறது. இந்ததேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்று, பாஜக அம்மாநில ஆட்சியை பிடிக்க பல்வேறு வியூகங்களை வகுத்துவருகிறது.

அதன்படி, காஷ்மீரில் ஒருகாட்சி ஆட்சியமைக்க தேவையான 44 இடங்களைப் பெறவேண்டும், என்பதை மையமாக வைத்து 'மிஷன் 44+' என்று தலைப்பிட்டு காஷ்மீர் தேர்தலில் புதியவியூகத்துடன் பா.ஜ.க. தலைவர்கள் களம் இறங்கியுள்ளனர்.

அங்கு தேசியமாநாட்டு கட்சி, பா.ஜ.க., காங்கிரஸ், மக்கள் ஜனநாயக கட்சிகளிடையே ஆட்சியைப்பிடிக்க கடும்போட்டி ஏற்பட்டுள்ளது. ஆளும் தேசிய மாநாட்டு கட்சி மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளதால் மக்கள் ஜனநாயக கட்சி ஆட்சியைப் பிடிக்க தீவிரபிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.

காஷ்மீரில் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சிகளுக்கு வெற்றிகிடைக்காது என்பது உறுதியாகி விட்ட நிலையில் மக்கள் ஜனநாயக கட்சி மட்டுமே பா.ஜ.க.வுக்கு ஒரேபோட்டியாக உள்ளது. எனவே மக்கள் ஜனநாயக கட்சியை வீழ்த்த பாஜக. புதிய வியூகத்தை தொடங்கியுள்ளது.

அதன் படி காஷ்மீர் முன்னாள் பிரிவினைவாதியும் மக்கள் மாநாட்டு கட்சி தலைவருமான சாஜித்லோனை பாஜக. தங்கள் பக்கம் கொண்டு வந்துள்ளது . சாஜித் லோன் டெல்லி வந்து பிரதமர் மோடி, பா.ஜ.க. தலைவர்கள் ராம் மாதவ், நட்டா ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

காஷ்மீரில் பாஜக.வும் மக்கள் மாநாட்டு கட்சியும் சேர்ந்து ஆட்சியமைப்பது பற்றி பேசினார்கள். இதில் ஒருமித்த கருத்து எட்டப் பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Leave a Reply