ரயில்வே துறையை தன்னிடமிருந்து பறிக்கப்பட்டதால் வருத்தப்படவில்லை என மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் தும்கூரில் சதானந்த கவுடா செய்தியாளர்களிடம் இது குறித்து மேலும் கூறியதாவது;

என்னை மத்திய ரயில்வே துறையில் இருந்து வேறுதுறைக்கு மாற்றியதால் கர்நாடகத்திற்கு பாஜக எவ்வித அநீதியும் இழைக்கவில்லை.இதுதொடர்பாக எதிர்க் கட்சிகளும், எனது ஆதரவாளர்களும் பிரதமர் நரேந்திர மோடியையும், பாஜக.,வையும் விமர்சிக்கக் கூடாது.

என்னிடமிருந்து ரயில்வேதுறை பறிக்கப்பட்டதால் எனக்கு எந்தவருத்தமோ கவலையோ இல்லை. இதுவிஷயத்தில் நான் அதிருப்தி அடைந்திரு ப்பதாக ஊடகங்கள் தவறான செய்தியை வெளியிடுகின்றன. தற்போது எனக்கு வழங்கப் பட்டிருக்கும் துறையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். இத்துறை சார்ந்த அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து சிறப்பாக செயல் படுவேன்.

யாருக்கு என்ன பொறுப்பு வழங்க‌வேண்டும் என்பது பிரதமர் நரேந்தி மோடிக்கு தெரியும். அவர் பலமுறை யோசித்து அமைச்சரவையை மாற்றி அமைத்திருக்கிறார். தற்போது ரயில்வே அமைச்சராக பொறுப் பேற்றிருக்கும் சுரேஷ்பிரபு மிகச்சிறப்பாக செயல்படுவார். அவருக்கு நல்ல அனுபவமும், நிர்வாக திறமையும் இருக்கிறது என்றார்.

Leave a Reply