மியான்மர் நாட்டில் சீன பிரதமர் லீ கேகி யாங், ரஷிய பிரதமர் மெட்வதேவ் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் தலைவர் களை நரேந்திர மோடி சந்தித்து பேசினார்.

மியான்மர், ஆஸ்திரேலியா, பிஜி உள்ளிட்ட நாடுகளுக்கு 10 நாள் பயணமாக பிரதமர் நரேந்திரமோடி சென்று உள்ளார். முதல் கட்டமாக, இந்தியா-ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய உச்சிமாநாடுகளில் பங்கேற்பதற்காக மியான்மருக்கு சென்றார். அங்குள்ள நே பி தா நகரில் இம்மாநாடுகள் நடைபெற்றன.

மாநாட்டுக்கு வந்திருந்த உலக நாடுகளின் தலைவர்களை அங்கு அவர் சந்தித்துபேசினார். நே பி தா நகரில் நேற்று முன்தினம் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை பிரதமர் மோடி சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மலேசியபிரதமர் முகமது நஜிப்பையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

ரஷிய பிரதமர் டிமிட்ரி மெட்வ தேவை பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்துபேசினார். அப்போது இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையேயான உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

இந்த சந்திப்பின்போது, இந்தியா எங்களுடைய நெருங்கிய மதிப்புமிக்க தோழமை நாடு என்று ரஷியபிரதமர் புகழாரம் சூட்டினார். 15வது இந்திய-ரஷிய உச்சிமாநாட்டுக்காக, ரஷிய அதிபர் புதின் அடுத்தமாதம் இந்தியா வருவது குறிப்பிடத்தக்கது ஆகும்.

மாநாட்டுக்கு வந்துள்ள சீன பிரதமர் லீ கேகி யாங்கை பிரதமர் நேற்று சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். நேற்றைய சந்திப்பின் போது, கடந்த செப்டம்பர் மாதம் சீன அதிபர் ஜி ஜின் பிங்கின் இந்திய வருகை குறித்து மோடி நினைவு படுத்தினார். அந்தவருகை மறக்க முடியாதது என்று அவர் கூறினார்.

அவரது கருத்துக்கு பதில் அளித்த சீன பிரதமர் லீ கேகி யாங், சீன அதிபரின் பயணம் மிகப் பெரிய வெற்றியாக அமைந்து விட்டதாக கூறினார்.

மேலும் மோடியை சீனாவுக்கு வருமாறு அவர் அழைப்புவிடுத்தார். மோடியை வரவேற்க சீனா ஆர்வமாக உள்ளதாக அவர் கூறினார்..

Leave a Reply