மூன்று நாள் சுற்று பயணமாக பதவியேற்று முதல் முறையாக‌ யு.ஏ.இ வருகைதந்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வாராஜ்க்கு துபாயில் வரவேற்பு அளிக்கப்பட்டது. துபாயில் கிரேன்ட்ஹயாத் ஹோட்டலில் இந்தியதூதரகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில் சுஸ்மா ஸ்வராஜ்ஜீடன் இந்திய தொழிதில‌பர்கள் உள்ளிட்ட வெளிநாடு வாழ் இந்தியர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இந்தநிகழ்ச்சியில் ஐக்கிய அரபு எமிரேட்சின் அமைச்சர் சேக் நஹ்யான்பின் முபாரக் அல் நஹ்யான் உடன் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ,யுஏஇல் 2.6 மில்லியன் இந்தியர்கள் உள்ளனர்.

வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்கள் குறிப்பாக யு.ஏ.இல் உள்ள இந்தியர்கள் அதிகளவு பணங்களை இந்தியாவுக்கு அனுப்புவதில் முக்கியபங்கு வகிக்கிறார்கள் .இந்தியர்கள் இங்கே(யுஏஇ) சம்பாதிப்பது போன்று இந்தியாவிலும் தாங்கள்பொருள்களை முதலீடுசெய்து இந்தியாவிலும் உங்கள் வருமானத்தை பெருக்க வேண்டும்.

யுஏஇல் உள்ள‌ இந்தியர்களுக்கு அஜ்மானில் சமூகநல‌கூடம் கட்டுவது உள்ளிட்ட‌ சமூக நல பணிகளுக்கு திர்ஹம்ஸ் 1 மில்லியன் ஒதுக்கப் படுவதாகவும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் யுஏஇக்கான இந்தியதூதர் சீத்தாராம்,துபாய் கன்சல் ஜெனரல் அனுராக்பூஷன், தமிழகத்தை சேர்ந்த தொழிலதிபர்கள் லியாக்கத் அலி, ஜெயந்திமாலா சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply