அனைத்து துறைகளிலும் இந்தியாவுக்கு ஒத்துழைப்பு தர தயார் என்று சவுதி அரேபியா உறுதி அளித்துள்ளது.

ஜி 20 மாநாட்டின்போது பிரதமர் நரேந்திரமோடி, சவுதி அரேபியா நாட்டு இளவரசர் அப்துல் அஜீஸ் அல் சவுத்தை சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவுடன் அனைத்து துறை களிலும் ஒத்துழைப்பு அளிக்க தயாராக உள்ளதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடிக்கு வாழ்த்துதெரிவித்த சவுதி அரேபியா இளவரசர், அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பு அளிக்க தயாராக உள்ளதாக கூறினார். இதற்கிடையே பிரதமர் நரேந்திரமோடி ஜெர்மனி நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்கலை சந்தித்துபேசினார். பிரதமர் மோடியிடம் பேசிய ஏஜ்சலா மெர்கல், இருநாடுகள் இடையிலான உறவு மிகவும் ஆழமாகிவருகிறது, உங்கள் வருகைக்காக காத்திருக்கிறோம். என்று கூறினார்.

ஜி 20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கருப்புபணம் விவகாரம் குறித்து பேசினார். கருப்பு பணத்தை மீட்க நெருங்கிய ஒருங்கிணைப்புதேவை என்று வலியுறுத்தினார். நெருக்கமான ஒருங்கிணைப்பு கருப்பு பணத்தை மீட்பதற்கு மட்டும் முக்கியமானதல்ல , பயங்கரவாதம், போதைமருந்து கடத்தல் மற்றும் ஆயுதக்கடத்தல் போன்ற பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பான சவால்களுக்கும் முக்கியமானது. என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply