பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையுடன் கூடிய சன்சாத் ஆதர்ஷ் கிராம் யோஜனா (எஸ்.ஏ.ஜி.ஒய்) திட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களதுதொகுதிக்கு உட்பட்ட ஒருகிராமத்தை தத்தெடுத்து அதன் மீது சிறப்புகவனம் செலுத்தி வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்கிறார்கள்.

இதன் அடிப்படையில் கன்னியா குமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினரும், மத்திய கப்பல் போக்கு வரத்து மற்றும் நெடுஞ் சாலைகள் துறை இணை அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் தக்கலை அருகே உள்ள முத்தலக் குறிச்சி கிராமத்தை தத்தெடுத்து உள்ளார்.

இதன் மூலம் இந்த கிராமத்து மக்களுக்கு மேம்படுத்தப்பட்ட சாலை வசதி, கழிவு நீர் கால்வாய் வசதி, சுத்தமான குடிநீர்வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உரிய வகையில் கிடைக்கும். இதனால் இந்த கிராம மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும்.

இது குறித்து பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த திட்டம் மூலம் கிராம முன்னேற்றத்துக்கு சம்பந்தப் பட்ட கிராம மக்களின் பங்கு மிகவும் அவசியம் . குறிப்பிட்ட காலத்துக்குள் அனைத்து வசதிகளும் இந்த கிராம மக்களுக்கு செய்துதரப்படும்" என்று கூறியுள்ளார்.

Leave a Reply