இந்தியாவின் குடியரசுதின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருமாறு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக, தனது 'டுவிட்டர்' பக்கத்தில் தகவல் வெளியிட்ட மோடி, 'இந்த (2015) குடியரசு தினவிழாவில் ஒரு நண்பரை பங்கேற்க செய்யவுள்ளோம். இந்தவிழாவில் சிறப்பு விருந்தின ராக பங்கேற்பதன் மூலம் இந்திய குடியரசு தினவிழாவில் பங்கேற்கும் முதல் அமெரிக்க அதிபராக ஒபாமா விளங்குவார்' என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த தகவல் வெளியான சிலமணி நேரங்களுக்குள் மோடியின் அழைப்பை ஒபாமா ஏற்று கொண்டுள்ளதாகவும், 26-1-2015 அன்று டெல்லியில் நடைபெறும் இந்திய குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக அவர் பங்கேற்பார் என்றும் அமெரிக்க அதிபரின் ஊடகத் துறை செயலாளர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயணத்தின் போது பிரதமர் மோடி மற்றும் இந்திய அதிகாரிகளை சந்திக்கும் அதிபர் ஒபாமா, இந்திய-அமெரிக்க நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது ,விரிவுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்வார் என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

Leave a Reply