நதிகளை இணைக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்துவருவதாக நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதி தெரிவித்துள்ளார். டெல்லியில் நீர் வளம் தொடர்பான தேசிய மாநாட்டை தொடங்கிவைத்து பேசிய அவர் இதனை தெரிவித்தார். ஒரு சில மாநிலங்களை தவிர மற்ற அனைத்து

மாநிலங் களிலும் நதிகள் இணைப்பு திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக உமா பாரதி கூறியுள்ளார். சிலரது சந்தேகங்களை போக்கிவிட்டால் நதிகள் இணைப்பு திட்டத்தை சாத்திய மாக்கிவிடலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

நதிகள் இணைப்பு திட்டத்திற்கு சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் சிலர் தயக்கம்காட்டி வருவதாகவும் தெரிவித்த உமா பாரதி அவர்களுக்கு உரிய முறையில் தடைகளை அகற்றமுடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Leave a Reply